திரையுலகினரின் இரங்கல்

திரையுலகினரின் இரங்கல்

1 mins read
eedd222a-cdfc-46c3-b2a4-60afc5b98b61
விஜயகாந்த். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திரிஷா, “ஆழ்ந்த இரங்கல் கேப்டன். உங்கள் அன்பை நான் என்றென்றும் நினைவில் கொள்கிறேன்.

ஹரிஷ், “தங்க இதயம் கொண்ட மனிதர். உங்களை உண்மையாகவே தவறவிட்டுவிட்டோம் சார்.

அருள்நிதி, “மிகச்சிறந்த மனிதர். ஆழ்ந்த இரங்கல் கேப்டன்.

ஆர்ஜே பாலாஜி, “நீங்கள் எப்போதும் அன்பானவர், நல்லவர், தைரியமான மனிதர், தலைவர், சாதனையாளர் என்று நினைவுகூறப்படுவீர்கள்.

துஷாரா, “நடிகர் விஜயகாந்த் சார் காலமானார் என்ற செய்தியால் ஆழ்ந்த வருத்தம். அவரது மறக்கமுடியாத நடிப்பு திரையுலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

நந்தா, “தங்கமான குணம் கொண்டவர். எங்கள் இதயங்களில் எப்போதும் நாயகனாக இருப்பீர்கள் டியர் விஜயகாந்த் சார்.

சிம்புதேவன், “சினிமாவில் பல துறைகளிலும் யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குருவாக இருக்கலாம். ஆனால் ‘மனிதநேயத்தில்’ எல்லோருக்கும் குருவாக இருந்தது நீங்கள்தான்!

ஆர்யா, “உண்மையான கேப்டன்! உண்மையிலேயே நலம் பெற விரும்பி அனைவரையும் கவனித்துக்கொள்வார்! உங்களின் ஆன்மா சாந்தியடை வேண்டுகிறேன்!

சமுத்திரகனி, “என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பார். அவர் ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் கேப்டன். உங்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி