திரையரங்கத்துக்கு வந்து மிரட்டும் பேய்

1 mins read
9ca8051e-a5c5-4304-b35b-8a81a6292163
‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி. - படம்: ஊடகம்

மீண்டும் ஒரு பேய்க் கதையில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

கடந்த மாதம் வெளியான ‘சைத்ரா’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், ’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற பேய்ப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் முனீஸ்காந்த் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

“ஒரு திரையரங்கத்தில் ஆபாசப் படம் ஒன்று திரையிடப்படுவதாக வெளியாகும் தகவலைக் கேள்விப்பட்டு இளையர்கள் சிலர் படம் பார்க்கச் செல்கின்றனர். அவர்களில் யாஷிகாவும் அவரது தோழிகளும் அடங்குவர்.

“படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென உண்மையாகவே ஒரு பேய் அங்கு வருகிறது. இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போகிறார்கள்.

“திரையரங்கில் சிக்கிக்கொள்ளும் அனைவரும் தப்புகிறார்களா, அவர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் கதை,” என்கிறார் படத்தின் இயக்குநர் ரமேஷ் வெங்கட்.

முழுக்கதையும் திரையரங்கத்துக்குள்தான் நடக்குமாம்.

‘யூடியூப்’ தளத்தில் பிரபலமாக உள்ள பலரும் இதில் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்