மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கும் திரிஷா

1 mins read
4e4053b0-4630-4de5-b615-23dde18e7323
திரிஷா. - படம்: ஊடகம்

மீண்டும் இந்திப் படத்தில் நடிக்க உள்ளார் திரிஷா.

பாலிவுட் படவாய்ப்புகளில் அதிக ஆர்வம் காட்டாத இவர், கடந்த 2010ஆம் ஆண்டு அக்‌ஷய்குமார் ஜோடியாக ‘கட்டா மீட்டா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி படம் ஒன்றில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா.

விஷ்ணுவர்த்தன் இயக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்