தனுஷ் படத்துக்கு ‘யு/ஏ’ தணிக்கைச் சான்றிதழ்

தனுஷ் படத்துக்கு ‘யு/ஏ’ தணிக்கைச் சான்றிதழ்

1 mins read
bd3b791f-378d-420b-ba3e-66bdf8fe8fcb
‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ். - படம்: ஊடகம்

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ‘யு/ஏ’ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்தப் படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகையின்போது வெளியீடு காண்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா அருண் மோகன் நாயகியாக நடித்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் குறுமுன்னோட்ட காட்சித் தொகுப்புக்கும் முதல் பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்