தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜயகாந்துக்கு சிலை அமைக்க கோரிக்கை

1 mins read
d8faab20-9d0c-42a0-b095-a9051ae66ac0
விஜயகாந்த். - படம்: ஊடகம்

காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்திற்கு மதுரையில் முழு உருவச் சிலை நிறுவ வேண்டும் என தமிழக அரசுக்கு திரைப்பட செய்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், விஜயகாந்த் சென்னையில் வசித்து வந்த சாலிகிராமம், விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைக்கு ‘கேப்டன் விஜயகாந்த் சாலை’ அல்லது ‘புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்’ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என்றும் செய்தியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விஜயகாந்த் பெயரில் ஆண்டுதோறும் திரைப்பட விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றும் செய்தியாளர்கள் ஒர் அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்