ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா

1 mins read
b8e7c0b1-af2d-4bc5-b71b-c431c0c36292
நயன்தாரா. - படம்: ஊடகம்

நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர், திரை உலகில் தாம் நிலைத்து நிற்க ரசிகர்கள்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

‘ஒவ்வொரு முறை நான் கீழே விழுந்தபோது மீண்டும் எழ காரணம் நீங்கள் அளித்த உத்வேகம்தான்.

“நீங்கள் இன்றி இந்தப் பயணம் முழுமை அடையாது. ரசிகர்களின் ஆதரவுதான் இருபது ஆண்டுகள் எனும் மைல்கல்லை நான் கொண்டாடக் காரணம் என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

குறிப்புச் சொற்கள்