நாயகன், வில்லன்: எதற்கும் தயார் என்கிறார் ஸ்ரீகாந்த்

நாயகன், வில்லன்: எதற்கும் தயார் என்கிறார் ஸ்ரீகாந்த்

1 mins read
d8e8edf2-2c50-460c-b04d-b06dc843a3e6
ஸ்ரீகாந்த். - படம்: ஊடகம்

ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை என்றாலும், தனக்குரிய நல்ல வாய்ப்புகளைப் பெற்று வந்தார் ஸ்ரீகாந்த்.

சங்கரின் ‘நண்பன்’ படத்திற்குப் பிறகு இரண்டு நாயகர்களில் ஒருவராகவும் நடித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் தனிநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

அந்த வகையில் அறிமுக இயக்குநர் சங்கர் பாரதி இயக்கும் ‘தினசரி’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஸ்ரீகாந்த். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

ராமராஜன் நடித்த ‘மில் தொழிலாளி’ படத்தை தயாரித்த விஜய் முரளிதான் இப்புதிய படத்தையும் தயாரிக்கிறார்.

தமிழில் வாய்ப்பு இல்லாததால் சில ஆண்டுகளாக தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார் ஸ்ரீகாந்த்.

தற்போது தமிழில் வில்லனாக நடிக்கவும் அவர் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், கால்ஷீட் ஒதுக்குவதில் தாராளம் காட்டுவதாகவும் ஊதியம் தொடர்பாக கறார் காட்டாமல் ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது. தற்போது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த்.

குறிப்புச் சொற்கள்