தென்னிந்தியப் படங்களில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

தென்னிந்தியப் படங்களில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

1 mins read
1f9463ec-8138-4ad1-a33b-6cd30ed3a2f0
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூரும் குஷியும் இந்தித் திரையுலகில் மெல்ல வளர்ச்சி கண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார் மூத்த மகள் ஜான்வி கபூர்.

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ‘தேவரா’ என்ற படத்தில் ஜான்விதான் நாயகியாம். இதையடுத்து புத்தாண்டில் தமிழ்ப் படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக உள்ளாராம்.

ஜான்விக்குப் பிடித்தமான தமிழ் நடிகர் விஜய் சேதுபதி. எனவே தமிழில் அவரது முதல் படம் விஜய் சேதுபதியுடன்தான் அமையும் என்றும் இப்புத்தாண்டில் குறைந்தபட்சம் இரண்டு தமிழ்ப் படங்களிலாவது அவர் நடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்