மீண்டும் நடிப்பதற்கு ஏதுவாக உடலை வலுப்படுத்தும் சமந்தா

1 mins read
d053f755-c6c6-454c-9776-07ee49c15bcb
எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபடும் சமந்தா. - படம்: என்டிடிவி

சமந்தா தனது சமூக ஊடகத்தில் 2023ஆம் ஆண்டின் கடைசி பயிற்சி முறை என்று பதிவு செய்துள்ள காணொளியைப் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் பரவி வருகிறது.

மயோசிடிஸ் என்ற நோய்க்கு சிகிச்சை பெறுவதை அடுத்து திரையுலகில் இருந்து தற்காலிகமாக விலகினார் சமந்தா.

கடைசியாக அவரது நடிப்பில் ‘சாகுந்தலம்’, ‘குஷி’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளிவந்தன. இவற்றில் ’குஷி’ நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ‘ஒர்க் அவுட்’ செய்யும் காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை சமந்தா அதிக எடையைத் தூக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைப் பார்க்கும்போது உங்களது உடல்நிலை பழைய உடற்கட்டுக்குத் திரும்பியுள்ளது தெரிகிறது. மீண்டும் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிப்பதற்குத் தயாராகி விட்டீர்கள் என்பதில் மகிழ்ச்சி என ரசிகர்கள்சிலர் கருத்துகளைப் பதிவிட்டு உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்