சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லினில் 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ள அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதாக நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் நகைச்சுவை நடிகர் சூரி, தான் நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படத்திற்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
74வது பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் ‘கொட்டுக்காளி’ பெற்றுள்ளது.
விடுதலை படத்தைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் சூரி நாயகனாக நடித்து வருகிறார்.