‘எல்ஐசி’: தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதல்

1 mins read
1bd1caac-5a6a-43f8-8fd7-7fa4062c37ad
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன். - படம்: ஊடகம்

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் படத்திற்கு ‘எல்.ஐ.சி’ என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

நவீன தொழில்நுட்ப உலகில் அதுகுறித்து அதிகம் அறிந்திடாத தந்தைக்கும் நவீனகால மகனுக்கும் இடையே அன்றாடம் நடக்கும் மோதல்களும் கருத்து வேறுபாடுகளும்தான் கதையாம்.

இதில் இடம்பெறும் தந்தை கதாபாத்திரம் இயற்கை, விவசாயம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்பாத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நடிக்க உள்ளதாகத் தகவல். இயற்கை விவசாயி பாத்திரம் என்றதும் உடனடியாக நடிக்க சம்மதித்தாராம் சீமான்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி