சித்தார்த் நடித்த படத்தைப் பாராட்டிய நயன்தாரா

1 mins read
4d46e01b-8fb9-44bd-a32d-363db77272a0
நயன்தாரா. - படம்: ஊடகம்

சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ’சித்தா’ திரைப்படம் அருமையான படைப்பு என நடிகை நயன்தாரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ’சித்தா’வும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது நீங்கள் (சித்தார்த்) இதுவரை நடித்துள்ள படங்களிலேயே ஆகச் சிறந்தது. அருண்குமார் மிக அற்புதமான படத்தை உருவாக்கி உள்ளார்.

“ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்,” என்று நயன்தாரா கூறியுள்ளார்.

பொதுவாக பிறர் நடித்த படங்கள் குறித்து நயன்தாரா கருத்து தெரிவிப்பது அரிது.

தற்போது சித்தார்த்துடன் ’டெஸ்ட்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார். அந்த நட்பின் அடிப்படையில் சித்தார்த் படத்தைப் பார்த்து அவர் பாராட்டி உள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்