கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் ’மங்கை’ என்ற படத்தில் நடிகை ‘கயல்’ ஆனந்தி நடித்து வருகிறார்.
குபேந்திரன் காமாட்சி இயக்கும் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி அண்மையில் வெளியானது.
அதில், சிதறிக்கிடக்கும் ஒரு பெண்ணின் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக இணைப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெண்கள் பாலியல் ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அலசும் படமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

