ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது நல்ல விஷயம் என்றாலும் ஒருவர் செய்த உதவியை வைத்து இன்னொருவரிடம் கேள்விகளை எழுப்பக்கூடாது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தானும் சமூகப் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால் நான் செய்த உதவிகளை வைத்து விளம்பரம் தேடுவதில்லை. விளம்பரம் செய்தால்தான் உதவி செய்கிறோம் என்ற அர்த்தமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஐஸ்வர்யா.
தற்போது ‘தீயவர் குலைகள் நடுங்க’ ’ஹெர்’ ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், ’சுழல் 2’ என்ற இணையத் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

