திருமணம் குறித்த தகவலால் புலம்பும் சம்யுக்தா

1 mins read
92dd18c6-2e73-4b3b-9bcf-de6cf9c9be4c
சம்யுக்தா மேனன். - படம்: ஊடகம்

நடிகை சம்யுக்தா மேனன் தனது நெருங்கிய நண்பரை காதலித்து வருவதாகவும், வெகு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் வாய் திறக்காத நிலையில், தாம் செல்லும் இடங்களில் எல்லாம் திருமணம் குறித்து மட்டுமே கேள்விகள் எழுப்பப்படுவதாக புலம்புகிறார் சம்யுக்தா.

அண்மைக்காலமாக நல்ல பட வாய்ப்புகள் தேடிவந்த போதும் சம்யுக்தா அவற்றை ஏற்கவில்லை. இதையடுத்தே அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.

எனினும் சம்யுக்தா தரப்பில் காதல் விவகாரத்தை உறுதி செய்யவில்லை. அவரது வருங்கால கணவர் யார் என்பது குறித்து ஊடகங்களில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்