நாயகனாகும் சண்டைப் பயிற்சியாளர்

நாயகனாகும் சண்டைப் பயிற்சியாளர்

1 mins read
417ed5a1-8c01-4928-b565-7cfff15e2f2d
பீட்டர் ஹெய்ன். - படம்: ஊடகம்

சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

அறிமுக இயக்குநர் மா.வெற்றி இயக்கும் படத்தில் பீட்டர் ஹெய்ன்தான் கதாநாயகன்.

“நகைச்சுவைப் படங்களும் அடிதடிப் படங்களும் மொழி, நாடு உள்ளிட்ட எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்படும்.

“அந்த வகையில் பீட்டர் மாஸ்டரை வைத்து உருவாகும் இந்தப் படம் உலகம் முழுவதும் திரைகண்டு சாதனை படைக்கும்,” என்கிறார் தயாரிப்பாளர் கே.எம். பஷீர்.

பெரும் பொருள் செலவில் இந்தப் படம் உருவாகிறதாம்.

இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி உள்ளார் பீட்டர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்