நடிகைகள் தனித்து வாழ்ந்தால் வதந்தி கிளம்புகிறது: மீனா

நடிகைகள் தனித்து வாழ்ந்தால் வதந்தி கிளம்புகிறது: மீனா

படம்: ஊடகம்

07 Jan 2024 - 12:09 pm

1 mins read

ஒரு நடிகை கணவர் இன்றி தனியாக வாழ்ந்தால் அவரைப்பற்றி கீழ்த்தரமான செய்திகளை பரப்புகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார் நடிகை மீனா.

ஆனால் ஒரு கதாநாயகன் இவ்வாறு தனித்து வாழ்ந்தால் வதந்திகள் வருவதில்லை என்று அண்மைய பேட்டியில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

’எத்தனையோ பெண்கள் கணவரை இழந்தும், தனியாக வாழ்ந்துகாட்டி வருகிறார்கள். எனவே நானும் இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்கவில்லை. எனது வாழ்க்கையில் இன்னொரு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை,” என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்