வெற்றிக்குக் காத்திருக்கும் பூமிகா

வெற்றிக்குக் காத்திருக்கும் பூமிகா

1 mins read
1fb51da0-ef35-4b79-9609-e7c172896bfd
பூமிகா. - படம்: ஊடகம்

மீண்டும் நடிக்கத் தொடங்கிய பிறகு, நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் நடிகை பூமிகா.

இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தமிழில் கடைசியாக உதயநிதியுடன் ’கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்திருந்தார்.

எனினும் அந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த வருத்தத்தில் இருப்பவர் அடுத்து ஜெயம் ரவி, ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறாராம்.

அந்தப் படம் வெற்றி பெற்றால் மும்பையில் இருந்து சென்னைக்கு இடம் மாறலாம் என அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்