பிரியங்கா: இதையெல்லாம் நியாயப்படுத்த இயலாது

பிரியங்கா: இதையெல்லாம் நியாயப்படுத்த இயலாது

1 mins read
d08bfb83-2563-4329-9f51-44f3db1c1e9d
‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ், பிரியங்கா. - படம்: ஊடகம்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தில் சமவிகிதத்தில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்கிறார் பிரியங்கா மோகன்.

அனைத்து மனித உயிர்களையும் மதிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முன்னோட்ட விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதியிடம் இளையர் ஒருவர் அத்து மீறினார். இதையடுத்து அந்த இளையருக்கு தக்க பதிலடி கொடுத்தார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படவேண்டும் என பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

“நம் வீட்டிலும் அம்மா, சகோதரிகள் எல்லாம் உள்ளனர். அவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்தால் நாம் சும்மா இருப்போமா?

“ஆனால் நாம் மட்டும் இன்னொரு பெண்ணிடம் இவ்வாறு தவறாக நடந்து கொள்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது,” என்கிறார் பிரியங்கா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்