அன்பர் தினத்தில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம்

அன்பர் தினத்தில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம்

1 mins read
9a261147-fed6-4539-b5b5-7bf030896ba4
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா ஜோடி. - படம்: ஊடகம்

திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் வரும் அன்பர் தினத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘கீதா கோவிந்தம்’ படம் தெலுங்கில் மட்டுமன்றி தமிழிலும் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தது. அதன்பிறகு ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. எனினும், வெளிநாடுகளில் ஒன்றாகச் சுற்றி வருவதாக செய்தி பரவியது. “நாங்கள் இருவரும் நண்பர்கள்தான், காதலர்கள் அல்ல,” என்று இருவரும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் பிப்ரவரி மாதத் துவக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளி வந்துள்ளன.

இப்போதும் இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்