பொங்கல் போட்டியில் குதிக்கும் படங்கள்

2 mins read
d039cb2a-8907-4e23-94d3-a2745b5c58d4
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படம்.  - படம்: ஊடகம்

பொங்கல் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பிரபல நாயகன்கள் நடித்துள்ள புதுப்படங்கள் வெளிவர வரிசை பிடித்து நிற்கின்றன.

‘அயலான்’:

சிவகார்த்திகேயன்-ரகுல் பிரீத் சிங் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படம் அயலான். ஏலியன் ஒன்றை மையமாக வைத்து ‘சயின்ஸ் பிக்சன்’ கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

‘கேப்டன் மில்லர்’:

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் உருவாகி உள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அண்மையில் மிரட்டலான முன்னோட்டக் காட்சி வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக இருக்கிறது.

‘மிஷன் சாப்டர் 1’ அச்சம் என்பது இல்லையே

‘மிஷன் சாப்டர் 1’ அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தில் அருண் விஜய், நிமிஷா சஜயன், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ எல் விஜய் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் அருண் விஜய் பேசியபோது, “பொங்கல் பண்டிகைக்கு என்னுடைய முதல் படமாக ‘மிஷன் சாப்டர்1’ வெளியாகிறது. இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. நாம் என்னதான் உழைப்பைக் கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது முக்கியமான விஷயம். என்னை வேறொரு கோணத்தில் இந்தப் படம் காட்டும்,” என்றார்.

‘மெரி கிறிஸ்மஸ்’

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோரின் கூட்டணியில் ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ராதிகா ஆப்தேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘குண்டூர் காரம்’

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படத்தை திரிவிக்ரம் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில், ‘அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களுக்கு ‘குண்டூர் காரம்’ சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜர்னி’ தொடர்

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் இயக்கியுள்ள ‘ஜர்னி’ இணையத் தொடரில் சரத்குமார், கலையரசன், பிரசன்னா, திவ்யபாரதி, ஆரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 12ல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்