நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் தனது திருமண வதந்திகள் குறித்து பேசியுள்ள அவர், “சினிமாவில் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில், நடிகர் ஜெய்யை காதலித்ததாகச் செய்தி வந்தது. பிறகு தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் தங்கி விட்டதாகச் சொன்னார்கள். எனக்கே தெரியாமல் எனக்குத் திருமணம் ஆனதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நடிகை என்பதால் அவர்கள் விருப்பத்திற்கு இப்படி எழுதுகிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி
1 mins read
அஞ்சலி. - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்