வில்லனாக நடிக்க இருக்கும் விஷ்ணு விஷால்

வில்லனாக நடிக்க இருக்கும் விஷ்ணு விஷால்

1 mins read
46fe6ff7-24fa-4e9b-a795-8812697504f8
இயக்குநர் கோகுலுடன் விஷ்ணு விஷால். - படம்: ஊடகம்

விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரே வில்லனாக நடிக்க இருக்கும் படத்தை பிரபல இயக்குநர் கோகுல் இயக்குகிறார்.

கோகுல் ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கி வெற்றி இயக்குநர் பட்டியலில் சேர்ந்தார்.

தற்பொழுது விஷ்ணு விஷால் தயாரிப்பில் விஷ்ணு விஷாலே வில்லனாக நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் கோகுல். விஷ்ணு விஷால் வில்லன் என்றால் நாயகன் யார் என்ற கேள்விக்கு, முன்னணி நடிகர்தான் நாயகனாக நடிப்பார் என்று கூறியுள்ளார். பெரும்பாலும் அவருக்கு பிடித்த நடிகரான விஜய் சேதுபதிதான் நாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்