‘இனிமேல் நான் வில்லனாக நடிக்கமாட்டேன்’

‘இனிமேல் நான் வில்லனாக நடிக்கமாட்டேன்’

1 mins read
0e117454-4ff6-46e3-9296-9d8a3d93bfca
கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக இந்தியில் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசும்போது, “இனி வில்லன் மற்றும் கௌரவ வேடத்தில் நடிக்க மாட்டேன். கௌரவ வேடத்தில் நடிக்கும்போது அதன்மீது வேறு ஒரு பார்வை இருந்தது.

“சில காட்சிகளில் நடிப்பதால் அந்தப் படத்துக்கு பக்கபலமாக இருக்கும் என எண்ணி நடித்துக் கொடுத்து வந்தேன். நான் இதுபோல் சின்ன வேடங்களில் நடிப்பதால் நான் நாயகனாக நடிக்கும் படங்களின் வியாபாரம் பாதிக்கத் தொடங்கியுள்ளது. அதனால்தான் கௌரவ வேடத்தில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

“அதுபோல் வில்லனாக நடிக்கவும் நிறைய பேர் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். வரும் கதைகள் எல்லாம் வில்லனாக சித்தரிப்பது போலவே வருகின்றன. கோவா அனைத்துலக திரைப்படம் விழாவுக்கு சென்றபோது வில்லனாக நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டேன்,” என்று பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்