பொங்கலுக்கு தொலைக்காட்சியில் லியோ

பொங்கலுக்கு தொலைக்காட்சியில் லியோ

1 mins read
8b063efc-43b0-4ab1-810e-17d9bd5ac794
விஜய், லோகேஷ் கனகராஜ். - படம்: ஊடகம்

அண்மையில் வெளியான ‘லியோ’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் அதிரடி நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் ரூ.598 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தியது. திரையரங்குகள், ‘ஓடிடி’ என ஒரு கலக்கு கலக்கிய ‘லியோ’ திரைப்படம் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படத்தை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யவுள்ளது. அதற்கான விளம்பரத்தையும் சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்