சிவகார்த்திகேயனின் 21வது படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ரூ.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

