தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கவேண்டும்’

1 mins read
6cc80f01-e97c-4d95-9c60-b88fc160fce0
விஜயகாந்த் சமாதியில் விஷால். - படம்: ஊடகம்

நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைத்தால், யார் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற விஷால், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் சங்க பொதுச் செயலாளராக நான் வெற்றி பெற்று விஜயகாந்த் வீட்டிற்கு வந்தபோது அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்திற்கு இறுதிச் சடங்கு செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்வு, தன் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும்,” என்று கூறினார். மேலும் நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைத்தால், யார் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்