ஜூன் மாதத்தில் ‘தி கோட்’ படம் வெளியாகும்

ஜூன் மாதத்தில் ‘தி கோட்’ படம் வெளியாகும்

1 mins read
077bd130-373a-49db-81ab-ae7d7c1a655c
இரட்டை வேடத்தில் விஜய். - படம்: ஊடகம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று அதன் இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

விஜய் நடிக்கும் படத்தை சுருக்கமாக ‘தி கோட்’ என அழைக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் நடைபெற்றது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு நிறைவுபெறும் என கூறப்படுகிறது. இப்படம் ஜூன் 13ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்