‘விஜயகாந்திற்காக நான் கட்டாயம் இதைச் செய்வேன்’

‘விஜயகாந்திற்காக நான் கட்டாயம் இதைச் செய்வேன்’

1 mins read
cf5e6eaf-4c33-46fd-b7f0-c59c794d34bf
சண்முக பாண்டியன். - படம்: ஊடகம்

விஜயகாந்த் பிரபலமாக இருந்த காலத்தில் விஜய், சூர்யா ஆகியோரின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவரைப்போல நானும் அவர் மகனின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் இதுபற்றி பேசியபோது, “விஜயகாந்த் கதாநாயகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சண்டை போட்டிருக்கிறார். பாடல் பண்ணியிருக்கிறார். அடுத்தவர்களை வளர்த்துவிடுவதில் மிகவும் சந்தோஷப்படுபவர். நானும் அவருடன் ‘கண்ணுபட போகுதயா’ படத்தில் மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு கொரியோகிராஃப் செய்திருக்கிறேன். ரொம்ப அழகாக ஆடியிருப்பார். என்னை நிறையவே ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

“அதனால் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவருடைய மகன் நடிக்கும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நானும் நடிப்பேன்,

“விஜயகாந்த் எத்தனையோ கதாநாயகர்களை வளர்த்துவிட்டிருக்கிறார். அவர் மகன் வளர்வதை நாம் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவரின் மகன் சண்முக பாண்டியனும் நானும் நடிப்பது போன்று கதை இருந்தால் சொல்லுங்கள்,” என்று பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்