ஹனுமான் படக்குழு எடுத்த அதிரடி முடிவு

ஹனுமான் படக்குழு எடுத்த அதிரடி முடிவு

1 mins read
ded7479d-9545-4dc7-a6a8-ef69e78274b8
ஹனுமான் படக்குழுவுடன் சிரஞ்சீவி. - படம்: ஊடகம்

‘ஹனுமான்’ திரைப்படத்துக்கு விற்கப்படும் டிக்கெட்டுகளில் ஒவ்வொன்றில் இருந்தும் 5 ரூபாயை அயோத்திக்கு வழங்க முடிவு செய்துள்ளது படக்குழு.

இம்மாதம் 22ஆம் தேதி ராமர் கோவில் அயோத்தியில் திறக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தங்களது திரைப்படத்துக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாயை அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்குவோம் என தெலுங்குத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் ‘ஹனுமான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்