எம்.ஜி.ஆர். ரசிகனாக கார்த்திக்

எம்.ஜி.ஆர். ரசிகனாக கார்த்திக்

1 mins read
b8e129fb-2e70-4fe3-8389-2a175ab89930
கார்த்தி. - படம்: ஊடகம்

கார்த்தி ‘ஜப்பான்’ படத்திற்குப் பிறகு ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகனாக நடித்து வருகிறார்.

இயக்குநர்கள் நலன் குமாரசாமி, பிரேம்குமார் இயக்குநர்களின் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கார்த்தி, இப்போது ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

கும்பகோணத்தில் தொடங்கிய படப்பிடிப்பு, தொடர்ந்து காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வந்தது. படத்தின் முக்கியமான வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார் என்றும் இது நாயகனுக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவம் உள்ள கதை என்றும் கதாநாயகிக்கான காட்சிகள் அதிகமாக இருக்காது என்பதால், சின்னத்திரை நாயகி ஒருவர்தான் நாயகியாக நடித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்