கமலுடன் இணைந்த பிரபலங்கள்

கமலுடன் இணைந்த பிரபலங்கள்

1 mins read
bf94630f-663e-4bd1-8e2c-892ec767df7e
ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் - படம்: ஊடகம்

கமல் நடிக்க இருக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் பிரபலங்கள் பலர் இணைந்திருக்கின்றனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளனர்.

இதனைப் படக்குழு சுவரொட்டி மூலம் அறிவித்துள்ளது. இந்தச் சுவரொட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்