தாதியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தாதியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

1 mins read
498d39c1-2510-407a-aeb6-e0c55aa3fe24
ஐஸ்வர்யா ராஜேஷ். - படம்: ஊடகம்

‘சிஸ்டர்’ என்ற படத்தில் தாதியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘சிஸ்டர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

மர்மம் நிறைந்த நகைச்சுவையாக இந்தப் படம் உருவாகிறது. ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர்கள் அருண் ராஜா காமராஜ், சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் சுவரொடடியை சமூக வலைத்தளம் மூலம் வெளியிட்டனர். கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஒரு மருத்துவமனையில் தாதியாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான நகைச்சுவையுடன் பரப்பரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி பற்றிய அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்