தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

900 திரைகளில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’

1 mins read
71b01b75-be10-4e6d-a548-4a5c1ed2e777
தனுஷ். - படம்: ஊடகம்

தனுஷ் நடித்த படங்களில் ‘கேப்டன் மில்லர்’ படம்தான் உலக அளவில் 900 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ படங்களின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். 17 ஆண்டுகளாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர்.

தற்போது நடிகர் தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகனும் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.

வெளிநாடுகளில் லைகா புரடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தினை வெளியிட்டது.

இந்நிலையில் உலக அளவில் 900க்கும் அதிகமான திரைகளில் வெளியாகி உள்ளது. இதுதான் தனுஷ் படங்களில் பிரம்மாண்ட வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்