ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ‘சைரன்’

ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ‘சைரன்’

1 mins read
933dd2ee-258f-4936-8980-f871251401fe
ஜெயம் ரவி. - படம்: ஊடகம்

ஜெயம் ரவி நடித்திருக்கும் சைரன் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘சைரன்’. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது.

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குடும்ப அம்சங்களுடன் பயம் கலந்த மர்மப் படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் சுவரொட்டியும் முன்னோட்டக் காட்சியும் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றன.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘சைரன்’ திரைப்படம் வருகிற 26ஆம் தேதி ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தச் செய்தி சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்