மீண்டும் இணையும் பொன்னியின் செல்வன் படக்குழு

மீண்டும் இணையும் பொன்னியின் செல்வன் படக்குழு

1 mins read
0f289dde-2dea-4457-b191-b6d499e87161
திரிஷா, ஐஸ்வர்ய லஷ்மி. - படம்: ஊடகம்

மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்ய லஷ்மி ஆகியோருடன் தற்பொழுது ஐஸ்வர்யா ராயும் இணைய இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’, ‘குரு’, ‘ராவணன்’, ‘பொன்னியின் செல்வன்’ என பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்.

‘நாயகன்’ படத்தை அடுத்து தற்போது கமலுடன் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் ஏற்கெனவே கமலுடன், திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து ஐஸ்வர்யா ராயின் பெயரும் அறிவிக்கப்பட உள்ளது.

அப்படி இந்தப் படத்தில் அவர் இணைந்தால் கமலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.

மேலும், இந்த படத்தில் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ள திரிஷா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் நடிகை ஐஸ்வர்யா லஷ்மியும் இணைந்துள்ளார். இதனைப் படக்குழு சுவரொட்டியைப் பகிர்ந்து அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்