நயன்தாரா: என் கணவரே எனக்கு பக்க பலம்

நயன்தாரா: என் கணவரே எனக்கு பக்க பலம்

1 mins read
a0a1af2c-8495-4872-9860-430c027e52ad
விக்னேஷ் சிவன், நயன்தாரா. - படம்: ஊடகம்

என் கணவர்தான் எனது மிகப்பெரிய பலம் என்று ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசினார் நயன்தாரா.

ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஓர் ஆண் இருப்பார் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, “எப்போதும் நம் காதில் விழக்கூடிய விஷயம், ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பதுதான். ஆனால் மிக அரிதான ஒரு விஷயம் என்னவென்றால் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஓர் ஆண் இருப்பார்.

“என்னுடைய வாழ்க்கையில் சினிமா தவிர நான் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் பின்னால் என் கணவர் இருக்கிறார்.

“நான் அவரைச் சந்தித்த பிறகு நான் இன்னும் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று அவர் எனக்கு கற்று கொடுத்துள்ளார்.

“என்றைக்குமே இதை ஏன் செய்கிறீர்கள்? அதை ஏன் செய்கிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டதில்லை. மாறாக இதை ‘ஏன் செய்யாமல் இருக்கிறீர்கள்?’ ‘ஏன் இதோடு நிற்க வேண்டும்?’ என்று தான் கேட்பார். எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்” இவ்வாறு நயன்தாரா பேசினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்