‘கனவுகளோடு நடிக்க வந்தேன்’

‘கனவுகளோடு நடிக்க வந்தேன்’

1 mins read
b0d5fcfc-af89-4f32-a89c-4af319f8b4d1
ரகுல் ப்ரீத் சிங். - படம்: ஊடகம்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மனம் நிறைந்த கனவுகளோடு நடிக்க வந்து இந்தித் திரையுலகில், நாயகியாக தாம் அறிமுகமானதாக கூறுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

அதன் பின்னர் கடும் உழைப்பு, முயற்சியால் முன்னணி நாயகி என்ற இடத்தைப் பிடித்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு நடிகையாக நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அதை மனதிற்கொண்டு உற்சாகமாகப் பணியாற்றுவேன்.

“நான் இந்த நிலையை எட்டிப்பிடிக்க பல்வேறு வகையிலும் உதவிய அனைவருக்கும் நன்றி,” என்று அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்