தயாராக இருக்கும் கங்கனா; படம் தயாரிக்க ஆளில்லை

தயாராக இருக்கும் கங்கனா; படம் தயாரிக்க ஆளில்லை

1 mins read
b40777f9-0e8b-40e7-97a2-56c4177ba9eb
கங்கனா ரணவத். - படம்: ஊடகம்

சர்ச்சைக்குரிய கதைகள் என்றால் கங்கனா ரணவத்தை ஒப்பந்தம் செய்வதையே பெரும்பாலான இந்தி இயக்குநர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில், அவரே ஒரு சர்ச்சைக்குரிய கதையில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை திரைப்படமாக்க விரும்புகி றாராம் கங்கனா.

இதற்கான கதையும் திரைக்கதையும் தயாராக உள்ளதாகவும் அவர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் கதை குறித்து ஆய்வு செய்துள்ளேன். ஆனால் ஓடிடி நிறுவனங்கள் இத்தகைய படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

“அரசியல் ரீதியிலான படங்களைத் தயாரிப்பதில்லை எனத் தெரிவித்துவிட்டன. எனக்கு வேறு என்ன வழி உள்ளது என்று சொல்லுங்கள்,” எனத் தமது சமூக ஊடகப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் கங்கனா ரணவத்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்