ஹாலிவுட் பிரபலம் இயக்கும் படத்தில் ‘பிக்பாஸ்’ மாயா

ஹாலிவுட் பிரபலம் இயக்கும் படத்தில் ‘பிக்பாஸ்’ மாயா

1 mins read
0841fbc3-04cc-4b95-83fb-1a29f3bd0b53
மாயா. - படம்: ஊடகம்

‘பிக்பாஸ்’ மூலம் பிரபலம் அடைந்த நடிகை மாயா, ஹாலிவுட் பிரபலம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கெனவே ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இரண்டு படங்களில் அவர் நடிப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அவற்றுள் ஒரு படத்தை ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் இயக்குகிறார் என்றும் இப்படம் தமிழில் உருவாகும் என்றும் தெரிகிறது.

யானிக் பென் ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, சமந்தாவின் ‘யசோதா’ ஆகிய படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்