தாதியாக நடிக்கும் ஐஸ்வர்யா

1 mins read
8bbcac16-fbca-4bb2-becc-3fba1fdba597
ஐஸ்வர்யா ராஜேஷ். - படம்: ஊடகம்

மாறுபட்ட கதாபாத்திரத்தை விரும்பும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து நகைச்சுவையும் திகிலும் நிறைந்த படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

’சிஸ்டர்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சபரிமுத்து இயக்குகிறார்.

இதில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

ஒரு மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இந்தப்படம் உருவாகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்