’அயலான்’ இரண்டாம் பாகம் உருவாகும்: சிவா

’அயலான்’ இரண்டாம் பாகம் உருவாகும்: சிவா

1 mins read
7abff28b-3339-40a4-8426-75b66fc08a4c
‘அயலான்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி - படம்: ஊடகம்

’அயலான்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துவரும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கும் உள்ளது என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினியும் சிவகார்த்திகேயனும் நடிப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் அவ்வாறு எந்த அழைப்பும் தமக்கு வரவில்லை என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

“தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு 80 விழுக்காடு முடிந்துவிட்டது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும். அதற்கான திட்டங்கள் உள்ளன.

“எந்த வெற்றியும் எளிதில் கிடைத்துவிடாது. அதற்குப்பின் நிறைய வலிகள் இருக்கும்,” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்