ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஏமி ஜாக்சன்

1 mins read
a53f516c-6e4a-4468-a0cc-4c88f9a60be2
ஏமி ஜாக்சன். - படம்: ஊடகம்

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் படத்தில் நடித்துள்ளார் நடிகை ஏமி ஜாக்சன். அவர் நடிப்பில் உருவாகி உள்ள ’மிஷன் சாப்டர் 1’ திரைப்படம் வெளியீடு கண்டுள்ளது.

இதில் லண்டனைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் ஏமி ஜாக்சன்.

“இயக்குநர் ஏ.எல்.விஜய் இப்படத்தின் கதையை விவரித்தபோதே இதில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் மனதில் ஏற்பட்டது.

“இந்தப் படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருக்கும்,” என்கிறார் ஏமி ஜாக்சன்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. அதற்கான படப்பிடிப்பு ஏமியின் சொந்த ஊரான லண்டனில் நடத்தப்பட உள்ளதாம்.

ஏமி கடைசியாக சங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்