இணையத்தொடராகும் ரவுடியின் வாழ்க்கை

இணையத்தொடராகும் ரவுடியின் வாழ்க்கை

1 mins read
cdbb983e-4f13-471f-9085-9c71ba75c593
கதிர். - படம்: ஊடகம்

மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் நடிகர் கதிர், தற்போது இணையத் தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்.

லிங்கம் என்ற ஒரு ரவுடியை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாகிறது. ‘லிங்கம்’ என்றுதான் தலைப்பும் வைத்துள்ளனர்.

கதை நாயகனாக கதிர் நடிக்கும் இந்த இணையத்தொடர் முன்னணி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

சங்கர் இயக்கும் ‘இந்தியன்-2’ படத்துக்கு வசனம் எழுதும் லட்சுமி நாராயணன்தான் இந்த இணையத்தொடரை இயக்குகிறார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்