தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியில் வெற்றிவலம் வருவேன்: கீர்த்தி சுரேஷ்

1 mins read
3817c068-5115-447b-9a30-95b506a9d0cb
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் மறுபதிப்பாகிறது.

இதை இயக்குநர் அட்லி தயாரிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திப் பதிப்பில் வருண் தவான் நாயகனாக நடிக்க உள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வாமிகா கபி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்கின்றனர்.

காலீஸ் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

இதையடுத்து பட வேலைகள் சூட்டோடு சூடாகத் தொடங்கி உள்ளன.

இந்திப் பதிப்பில் தனது கதாபாத்திரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என இயக்குநர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படம் வெளியானதும் பாலிவுட்டில் தம்மால் வெற்றிவலம் வரமுடியும் என நம்பிக்கை உள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் கூறுகிறாராம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்