அம்மாவின் அறிவுரை வழிநடத்துகிறது: ஏ.ஆர்.ரகுமான்

1 mins read
43461a4b-12fb-485e-9ec2-4fe387ef1e11
ஏ.ஆர்.ரகுமான். - படம்: ஊடகம்

மற்றவர்களுக்காக வாழும்போதும் சுயநலமின்றி செயல்படும் போதும்தான் நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதை உணர முடியும் என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

இசையமைக்கும்போதும் மனதில் தோன்றியதை எழுதும்போதும் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிக்கும்போதும் என் தாயாரின் அறிவுரையை நினைத்துக்கொள்வேன் என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

“எதிர்காலம் குறித்த குறைவான அறிவும் புரிதலும்தான் நமக்கு உள்ளது. நம்மால் எதிர்காலத்தைப் பெரிதாக கணித்துவிட முடியாது.

“மேலும் உங்களுக்காக அற்புதமான பெரிய விஷயம் ஒன்று காத்திருக்கிறது,” என்று ஏ.ஆர்.ரகுமான் ஆக்ஸ்போர்டு யூனியன் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்