பிக்பாஸ்-7: வெற்றிவாகை சூடினார் அர்ச்சனா

பிக்பாஸ்-7: வெற்றிவாகை சூடினார் அர்ச்சனா

1 mins read
e2ef0865-90bb-4221-9f52-36b6b2b64e79
கமல்ஹாசனிடம் இருந்து வெற்றிக்கிண்ணத்தைப் பெறும் அர்ச்சனா. - படம்: ஊடகம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் ஏழாம் பகுதியின் வெற்றியாளர் பட்டத்தை நடிகை அர்ச்சனா தட்டிச் சென்றுள்ளார்.

இம்முறை இரண்டாவது இடத்தை மணியும் மூன்றாவது இடத்தை மாயாவும் பெற்றுள்ளனர்.

இந்த முறை இறுதிச்சுற்று வரை ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் 106 நாள்கள் ‘பிக்பாஸ்’ வீட்டில் தாக்குப்பிடித்தனர்.

அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ், விஜய் வர்மா, விஷ்ணு உள்ளிட்டோர் இறுதிவரை பட்டத்துக்காகப் போராடினர்.

நிகழ்ச்சியின் முடிவில் அர்ச்சனா வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.50 லட்சம் ரொக்கம், புதிய கார் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

அர்ச்சனா பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் வெற்றி அவரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்