ஜனவரி 25ல் வெளியீடு காண்கிறது ‘தூக்குதுரை’

1 mins read
a505cbcb-b62c-45a6-9e33-f7763a12c0dd
‘தூக்குதுரை’ படத்தில் இனியா, யோகி பாபு. - படம்: ஊடகம்.

யோகிபாபு, நடிகை இனியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தூக்குதுரை’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், சென்றாயன், நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்புத்தான் இப்படத்தின் கதையாம். மனோஜ் இசையமைக்க, ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் ரசிக்க வைக்கும். யோகிபாபு வழக்கம்போல் தமது யதார்த்தமான நகைச்சுவையால் கவர்ந்துள்ளார்.

“நடிகை இனியா மிகுந்த திறமைசாலி. அவரது திறமையை முழுமையாக இன்னும் வெளிப்படுத்தவில்லை. இனி அதற்கான வாய்ப்புகள் தேடி வரும் என நம்புகிறேன்.

“இப்படத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அவர் நடித்துள்ளார்,” என பாராட்டுகிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்