விளம்பரங்களில் நடிக்க மறுத்த ஸ்ரீ லீலா

1 mins read
c4187f79-9026-4eeb-8daa-0d09786ab8c0
ஸ்ரீ லீலா. - படம்: ஊடகம்

மதுபானங்கள், இணையவழி சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மறுத்த இளம் நாயகி ஸ்ரீ லீலாவைப் பலரும் பாராட்டி உள்ளனர்.

தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவருக்குத் தமிழிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. அண்மையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இவர் இணைந்து நடித்த ‘குண்டூர் காரம்’ படம் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சில விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் ஸ்ரீ லீலாவை தேடி வந்துள்ளன. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவற்றை நிராகரித்துவிட்டாராம்.

பல கோடிகளைச் சம்பளமாகத் தருவதாக மதுபான நிறுவனங்கள் தூண்டில் போட்ட போதும் ஸ்ரீ லீலா அதில் சிக்கவில்லை. அவருக்கு நெருக்கமாக உள்ள சிலரும்கூட விளம்பரங்களில் நடிக்க வற்புறுத்தினராம். எனினும், எத்தனை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதில்லை எனும் கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்