கூச்சத்துடன் நடிப்பேன்: மனம்திறந்த அஞ்சலி

கூச்சத்துடன் நடிப்பேன்: மனம்திறந்த அஞ்சலி

1 mins read
3d8a2741-2270-4c06-8c6d-85922d65e9ca
நடிகை அஞ்சலி. - படம்: ஊடகம்

திரைப்படங்களில் இடம்பெறும் காதல், படுக்கையறைக் காட்சிகளின்போது கூச்சமாக இருக்கும் என்கிறார் நடிகை அஞ்சலி.

அதுபோன்ற காட்சிகளைப் படமாக்கும்போது சங்கடத்தை மறைத்துக்கொண்டு நடிக்க வேண்டியிருக்கும் என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“படத்தில் முத்தக் காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் வருவது கதைக்குத் தேவையானதுதான். அவற்றில் நடிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது.

“ஆனால், அத்தகைய காட்சிகளில் நடிக்கும்போது எதிரே நடிக்கும் நடிகர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற கவலை மனதில் எப்போதும் இருக்கும். பெரிய அளவில் சங்கடத்துடன், அப்போது ஏற்படும் கூச்சங்களை மறைத்துக் கொண்டுதான் அக்காட்சிகளில் நடிப்பேன்,” என்று கூறியுள்ளார் அஞ்சலி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்